| ADDED : ஜூன் 09, 2024 02:59 AM
கள்ளக்குறிச்சி, : 'நீட்' தேர்வில் கள்ளக்குறிச்சி ஏ.கே.டி. அகாடமி மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.இதுகுறித்து ஏ.கே.டி., கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன் கூறியதாவது:'நீட்' தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது முதல் ஏ.கே.டி., நீட் பயிற்சி மையத்தில் பயின்று வரும் மாணவ, மாணவிகள் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெற்று சிறப்பிடம் பெற்று வருகின்றனர்.இதன் காரணமாக இதுவரை 627 மாணவ, மாணவியர்கள் அரசு இட ஒதுக்கீட்டில் மருத்துவம் பயின்று வருகின்றனர். இந்த ஆண்டு 50 மருத்துவ இடங்களுக்கு பிரகாசமான வாய்ப்பு உள்ளது.நீட் தேர்வில் சுஜிதா 665, நிலவன் 660, ஹரிணி 638, ஆகாஷ்வேந்தன் 618, ஹரிணி 609, கயிலேஷ்கிரன் 605 ஆகியோர் சாதனை மதிப்பெண் பெற்றுள்ளனர்.மேலும் இந்த ஆண்டு நீட் தேர்வில் 650 மதிப்பெண்ணுக்கு மேல் 2 பேர், 600க்கு மேல் 6 பேர், 550க்கு மேல் 15 பேர், 500க்கு மேல் 31 பேர், 450க்கு மேல் 55 பேர், 400க்கு மேல் 74 பேர் பெற்றுள்ளனர்.குறிப்பாக தென்னிந்திய அளவில் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களைக் கொண்டு, ஏ.கே.டி., நேரடி நிர்வாகம் மூலம் மாணவர்களுக்கு 'நீட்' பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது என்றார்.தொடர்ந்து 'நீட்' தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று சாதித்த மாணவ, மாணவிகளுக்கும், பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கும் பாராட்டு விழா நேற்று மாலை நடந்தது.தாளாளர் மகேந்திரன் தலைமை தாங்கினார். செயலாளர் லட்சுமி பிரியா, நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன், தலைமை நிர்வாக அலுவலர் அபிநயா முன்னிலை வகித்தனர். பயிற்சி மைய முதல்வர் நான்சி மாதுளா வரவேற்றார்.'நீட்' இயக்குனர் அஞ்சப்பெல்லி ஸ்ரவன்குமார் 'நீட்' சாதனைகளை பட்டியலிட்டார். மெட்ரிக் பள்ளி முதல்வர் வெங்கட்ரமணன் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.