| ADDED : ஆக 07, 2024 05:29 AM
புதுச்சேரி : ஜிப்மரில் டயட் உணவு முறை நிறுத்தப்பட்டு மூன்று வேளையும் தயிர் சாதம் தரப்படுவதால் நோயாளிகள் கடும் பாதிப்பிற்குள்ளாகி வருவதாக சட்டசபையில் எம்.எல்.ஏ.க்கள், குற்றம்சாட்டினர்.ஜிப்மரில் உள் நோயாளிகளின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு, டயட் உணவு வகைகள் விநியோகிக்கப்படும். ஆனால் பணியாளர்கள் போராட்டத்தால் தற்போது ஜிப்மரின் உள்நோயாளிகள் அனைவருக்கும் மூன்று வேளையும் தயிர்சாதம் தரப்படுகிறது.சட்டசபையில் தி.மு.க., எம்.எல்.ஏ., சம்பத் இப்பிரச்னையை எழுப்பினர். அவர் கூறுகையில், மூன்று வேளையும் தயிர்சாதம் தருகிறார்கள். இதனால் ஜிப்மர் நோயாளிகள் டயட் உணவு இல்லாமல் பாதிப்பில் உள்ளனர். முதல்வர் தலையிட வேண்டும்', என்றார்.ஜிப்மர் இடம் பெற்றுள்ள தொகுதியின் எம்.எல்.ஏ ஆறுமுகம் கூறுகையில், 'டிரான்ஸ்பர் பாலிசியால் 15 ஆண்டுகளாக கேன்டீன் பணிபுரிவோர் வேறு இடத்துக்கு ஜிப்மரில் மாற்றி உள்ளனர்.அதனால் யாரும் பணிக்கு செல்லவில்லை. இயக்குனர் யார் சொன்னாலும் எதுவும் காதில் வாங்க மாட்டார். நோயாளிகள் வேதனைபடுகின்றனர். முதல்வர் தலையிட்டு தீர்வு காணவேண்டும்' என்றார். சபாநாயகர் செல்வம், 'இதுபற்றி முதல்வர் தலையிட்டு தீர்வு காண்பார்' என்றார்.