உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தேர்தல் அதிகாரி ஜவகருக்கு ஐந்து துறைகள் ஒதுக்கீடு

தேர்தல் அதிகாரி ஜவகருக்கு ஐந்து துறைகள் ஒதுக்கீடு

புதுச்சேரி : தலைமை தேர்தல் அதிகாரிஜவகருக்கு ஐந்து அரசு துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர்.அவர் நிதி, தொழில் வணிகத் துறை, கல்வி, துறைமுகம் உள்ளிட்ட முக்கிய துறைகளை கவனித்து வந்தார். லோக்சபா தேர்தலுக்கு முன்பாக, அவரிடமிருந்த துறைகள் அனைத்தும் விடுவிக்கப்பட்டு தலைமை தேர்தல் அதிகாரியாக மட்டும் பணியாற்றி வந்தார்.லோக்சபா தேர்தல் முடிந்த சூழ்நிலையில், தலைமை தேர்தல் அதிகாரி ஜவகருக்கு, கல்வி, தொழில் வணிகம், உள்ளாட்சி, வனம் மற்றும் வன விலங்கு,அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுஉள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலுடன், இதற்கான ஆணையை தலைமை செயலர் சரத் சவுகான் பிறப்பித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி