உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / 1,663 காவலர்களுக்கு ஓட்டுச்சாவடி பணி ஒதுக்கீடு

1,663 காவலர்களுக்கு ஓட்டுச்சாவடி பணி ஒதுக்கீடு

புதுச்சேரி: ஓட்டுச்சாவடிகளில் பணிபுரிய 1,663 காவலர்கள் தற்செயல் முறையில், ஒதுக்கீடு செய்யப்பட்டது.புதுச்சேரி லோக்சபா தொகுதி தேர்தலுக்கான ஓட்டுப் பதிவைத் திறம்பட நடத்துவதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், புதுச்சேரி பிராந்தியத்தில்- 739, காரைக்கால்-164, மாகி-31, ஏனாம்-33 ஓட்டுசாவடிகளும் என, மொத்தம் 967 ஓட்டுசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.இந்த 967 ஓட்டுச் சாவடிகளில் பணிபுரிவதற்கான காவலர்களைத் தேர்வு செய்வதற்கான தற்செயல் கலப்பு முறை நேற்று நடந்தது. தேர்தல் நடத்தும் அதிகாரி குலோத்துங்கன், காவல் பார்வையாளர் அமர்தீப் சிங் ராய், சீனியர் எஸ்.பி., நாரா சைத்தன்யா பார்வையிட்டனர்.இதன் அடிப்படையில், புதுச்சேரியில்- 1,252 காவலர்களும், காரைக்கால்-289, மாகேவில் -57, ஏனாமில்- 65 என மொத்தம் 1,663 காவலர்கள் 967 ஓட்டுச்சாவடி பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். துணை மாவட்ட தேர்தல் அதிகாரி வினயராஜ், பழனிவேல் எஸ்.பி., உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ