| ADDED : ஜூன் 06, 2024 02:23 AM
புதுச்சேரி: வெற்றி வாய்ப்பு இழப்பு ஒரு தற்காலிக தேக்கநிலை என்பதை உணர்ந்து சோர்வடையாமல் மக்கள் பணியில் ஈடுபட வேண்டும் என அ.தி.மு.க., கூறியுள்ளது. அக்கட்சியின் மாநில செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கை:ஆட்சி அதிகாரம், பணபலம் மற்றும் மத ரீதியிலும், ஜாதி ரீதியிலும் மக்களை பிரித்தாலும் பல்வேறு சூழ்ச்சிகள் உள்ளிட்ட அனைத்தையும் மீறி அ.தி.மு.க., வேட்பாளர் தமிழ்வேந்தனுக்கு ஓட்டளித்த வாக்காளர்களுக்கும், நன்றி தெரிவித்து கொள்கிறேன். எந்தவித பலனையும் எதிர்பார்க்காமல் தேர்தல் பணியில் தங்களை முழுமையாக ஈடுப்படுத்தி கொண்ட அனைத்து நிர்வாகிகள், தொண்டர்கள், கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்களுக்கு நன்றி. நடந்து முடிந்த புதுச்சேரி லோக்சபா தேர்தலில் கட்சி வெற்றி வாய்ப்பு இழப்பு என்பது ஒரு தற்காலிக தேக்க நிலை என்பதை கட்சியினர் உணர்ந்து, எதிலும் சோர்வடையாமல் தொடர்ந்து மக்கள் பணியில் எப்போதும் போல் ஈடுப்படுத்தி கொள்ள வேண்டும். நம் இலக்கு 2026 சட்டசபை பொதுத்தேர்தலில் வெற்றி என்பதை உணர்ந்து கட்சி பணியில் எவ்வித தொய்வும் இன்றி செயல்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.