உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சங்கராபுரம் ஒன்றியத்தில் 7 ஊராட்சிகளில் மிகை செலவு லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை

சங்கராபுரம் ஒன்றியத்தில் 7 ஊராட்சிகளில் மிகை செலவு லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை

சங்கராபுரம் : சங்கராபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட 7 ஊராட்சிகளில் மிகை செலவின புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பூட்டை, விரியூர், ராவத்தநல்லுார், புதுப்பட்டு, ரங்கப்பனுார், அரசம்பட்டு, தியாகராஜபுரம், மூங்கில்துறைப்பட்டு ஆகிய 7 ஊராட்சிகளில் 2015 ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை தனி அலுவலர் பதவி காலத்தில் மிகை செலவினம் செய்து நிதி முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.இது சம்பந்தமாக நிலுவையில் இருந்து வந்த இவ்வழக்கில், துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக 7 ஊராட்சி செயலர்களிடம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நிலையிலான அலுவலர்கள் சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், லஞ்ச ஒழிப்பு போலீசார் முன்னிலையில் நேற்று முதற்கட்ட விசாரணை மேற்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை