உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

வில்லியனுார் : விவேகானந்தா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.பள்ளி துணை முதல்வர் ரவி தலைமை தாங்கினார். பொறுப்பாசிரியர் முரளி முன்னிலை வகித்தார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் வேல்முருகன் வரவேற்றார்.வில்லியனுார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், போதை பொருட்களால் மாணவர்கள் சமுதாயம் சீரழிவு குறித்தும், போதைப் பொருட்களை தவிர்ப்பதால் ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்கலாம், என, பேசினார். சப் இன்ஸ்பெக்டர் சரண்யா, மாணவர்களின் எதிர்காலம் குறித்தும், போதை பொருட்களை பயன்படுத்துவதால் மன நலம் பாதிப்பு, உடல் உறுப்புகள் பாதிப்பு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து பேசினார்.விழாவில் சப் இன்ஸ்பெக்டர்கள் புவனேஸ்வரி, சந்திரகுமார், முருகேசன் மற்றும் உதவி சப் இன்ஸ்பெக்டர் தணிகைவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நாட்டு நலப்படுத்திட்ட அலுவலர் இறைவாசன் நன்றி கூறினார். விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை