மேலும் செய்திகள்
அரியாங்குப்பத்தில் பா.ஜ., காலண்டர் வழங்கல்
16 hour(s) ago
ஐகோர்ட் நீதிபதி முதல்வருடன் சந்திப்பு
16 hour(s) ago
புதிய அங்கன்வாடி அமைக்க பூமி பூஜை
16 hour(s) ago
காகிதக்கூழ் கைவினைப் பயிற்சி
16 hour(s) ago
வில்லியனுார் : அரியூர் ஸ்ரீராமச்சந்திரா ஆங்கில உயர்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தொடர்ந்து 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.ராமச்சந்திரா வித்யாலயா உயர்நிலைப்பள்ளி சார்பில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை 95 மாணவர்கள் எழுதி, அனைவரும் தேர்ச்சி பெற்றனர். பள்ளியில் குணசுந்தரேசன் 495 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார். இவர் தமிழ் 98, ஆங்கிலம் 99, கணிதம் 100, அறிவியல் 99, சமூக அறிவியல் 100 மதிப்பெண்களை பெற்றார். மாணவர் கருணாகரன் மற்றும் மாணவி ஹரிதா ஆகியோர் 488 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும், தேவஆனந்த் 486 மதிப்பெண்களுடன் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.தமிழில் 8 மாணவர்கள் 98 மதிப்பெண், ஆங்கிலத்தில் 5 பேர் 99, கணிதத்தில் 5 பேர் 100க்கு 100 மதிப்பெண், சமூக அறிவியல் 4 மாணவர்கள் 100க்கு 100 பெற்றுள்ளனர்.சாதனை படைத்த மாணவர்களை பள்ளி தாளாளர் சங்கரநாராயணன், நிர்வாக அலுவலர் ராம்பிரசாத் ஆகியோர் பாராட்டினர். தேர்ச்சி குறித்து தாளாளர் சங்கரநாராயணன் கூறுகையில், 'இப்பள்ளி தொடர்ந்து 100 சதவீதம் தேர்ச்சி பெற்று, சாதனை படைத்து வருகிறது. இந்த வெற்றிக்கு பாடுபட்ட ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கும் நன்றி' என்றார்.
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago