உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி அசோக்பாபு எம்.எல்.ஏ., வலியுறுத்தல்

போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி அசோக்பாபு எம்.எல்.ஏ., வலியுறுத்தல்

புதுச்சேரி: மானிய கோரிக்கைகள்மீதான விவாதத்தில் அசோக்பாபு எம்.எல்.ஏ., பேசியதாவது:வெளியூர்களுக்கு படுக்கை வசதியுடன் கூடிய பி.ஆர்.டி.சி., பஸ்களை அரசு இயக்க வேண்டும். அடிப்படை வசதி இல்லாமல் கோச்சிங் சென்டர்கள் இயங்கி வருகின்றன. அவற்றை அரசு ஆய்வு செய்ய வேண்டும்.மகளிர் காவலர்கள் ரோந்து செல்ல ஸ்கூட்டி வழங்கலாம். 100 அடி ரோடு மேம்பாலத்தின் கீழ் சமூக விரோத செயல்கள் அரங்கேறி வருவதால், அப்பகுதியில் போலீஸ் பூத் ஏற்படுத்த வேண்டும்.நகரில் கனரக வாகனங்கள் கண்ட நேரத்தில் வருவதால், போக்குவரத்து நெரிசலுக்கு இதுவும் ஒரு காரணமாக உள்ளது. குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் கனரக வாகனங்கள் ஊருக்குள் வந்து செல்லும் நேரத்தை அரசு ஒழுங்குப்படுத்த வேண்டும்.தொழிலாளர் துறை மூலம் கடந்த 2022--23ல் மத்திய, மாநில அரசு நடத்தும் போட்டி தேர்வுக்கு இலவசமாக பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. இதனால் புதுச்சேரி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது. இந்த பயிற்சி வகுப்பு கடந்தாண்டு நிறுத்தப்பட்டது. இளைஞர்களின் நலன் கருதி மீண்டும் போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடத்த வேண்டும். அரசு பொது மருத்துவமனையில் கிளையை கிராமப்புறத்தில் துவங்க வேண்டும்.மும்பையை தலைமையிடமாக கொண்டு தான் ஐ.டி.,கம்பெனிகள் செயல்படுகின்றன. நம்முடைய புதுச்சேரி கவர்னராக இருந்த ராதாகிருஷ்ணன் அங்கு கவர்னராக உள்ளார். எனவே அவரிடம் பேசி ஐ.டி. தொழிற்சாலைகளை புதுச்சேரிக்கு கொண்டு வரவேண்டும்.சட்ட துறை, நீதிமன்றத்தில் நிறைய காலியிடங்கள் ஏற்பட்டுள்ளன. சட்டத் துறை போதிய பணியாளர்கள் இல்லாதபோது மற்ற துறைகளிலும், சட்ட வழக்குகளிலும் காலதாமதம் ஏற்படுகிறது. எனவே விரைந்து காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும். மாற்றுதிறனாளிகள் சுய தொழில் உள்ளிட்ட வேலைவாய்ப்புகளை சமூக நலத்துறை மூலம் அரசு உறுதி செய்ய வேண்டும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி