| ADDED : ஏப் 30, 2024 05:12 AM
அரியாங்குப்பம்: மதுகுடித்து விட்டு சாலையில் நின்றவரை வீட்டுக்கு செல்லும்படி கூறியதால், மீனவரை கம்பியால் குத்தியவரை போலீசார் தேடிவருகின்றனர். அரியாங்குப்பம் அடுத்த வீராம்பட்டினம் நாகூரான் தோட்டத்தை சேர்ந்தவர் அன்பு, 54; மீன்பிடிக்கும் வேலை செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த ஜெயசீலன் என்பவர் தெப்பக்குளம் சாலையில் மது குடித்து விட்டு நின்றார். அவரை, வீட்டுக்கு செல்லுமாறு அன்பு கூறினார். இதனால் ஆத்திரமடைந்த ஜெயலசீலன் இரும்பு கம்பியால், அவரை குத்தினார். இதில், காயமடைந்து, அன்பு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின் பேரில், அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து, ஜெயசீலனை தேடிவருகின்றனர்.