| ADDED : ஆக 15, 2024 04:54 AM
2 பேர் மீது வழக்கு பதிவுதிருபுவனை: கண்டமங்கலம் அடுத்த பெரியபாபுசமுத்திரம், வானுார் சாலை பகுதியை சேர்ந்தவர் நாராயணசாமி, 74; இவரது மனைவி மல்லிகா, 68. இவர்களுக்கும் அதே பகுதியை சேர்ந்த ராமு குடும்பத்திற்கும் இடையே கடந்த 2019ம் ஆண்டு தகராறு ஏற்பட்டது. இதில் நாராயணசாமி குடும்பத்தினர் தாக்கப்பட்டனர்.இந்த வழக்கு விழுப்புரம் கோர்ட்டில் நடந்து வருகிறது. சமீபத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நாராயணசாமி, அவது மனைவி மல்லிகா மற்றும் மகன் ஆகியோர் கோர்ட்டில் ராமு, அவரது மகன் புருேஷாத்தமன் மற்றும் திருமூர்த்தி ஆகியோருக்கு எதிராக சாட்சி கூறினர்.இதில், ஆத்திரம் அடைந்த ராமு, அவரது மகன் புருேஷாத்தமன் ஆகியோர் கடந்த 10ம் தேதி காலை 8:30 மணிக்கு நாராயணசாமியின் வீட்டிற்குச் சென்று, வழக்கை வாபஸ் வாங்கக் கூறி, அவரையும் அவரது மனைவி மல்லிகா ஆகியோரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். படுகாயம் அடைந்த இருவரும் அரியூர் தனியார் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நாராயணசாமி புகாரின்பேரில் ராமு உட்பட இருவர் மீது கண்டமங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.