உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாநில அளவிலான ரக்பி போட்டி வென்ற வீரர்களுக்கு பரிசளிப்பு

மாநில அளவிலான ரக்பி போட்டி வென்ற வீரர்களுக்கு பரிசளிப்பு

புதுச்சேரி : மாநில அளவிலான ரக்பி போட்டியில் சாதித்த வீரர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது.புதுச்சேரி மாநில அளவிலான ரக்பி போட்டிகள் கிருமாம்பாக்கம் தனியார் பொறியியல் கல்லுாரியில் நடந்தது. இந்த போட்டியில் 200க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றனர்.வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. புதுச்சேரி ரக்பி சங்கத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். சங்க உறுப்பினர் தைநேசம் வரவேற்றார். ராஜிவ் காந்தி பொறியியல் தொழில்நுட்ப கல்லுாரி முதல்வர் விஜய கிருஷ்ணா ரப்பாக்கா, புதுச்சேரி ஒலிம்பிக் சங்க இணைச் செயலாளர் வளவன் ஆகியோர் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினர்.ஏற்பாடுகளை துணை செயலாளர் மோகன், துணைத் தலைவர்கள் குமரேசன், மணிகண்டன், விளையாட்டு வீரர்கள் செய்திருந்தனர். சங்க செயலாளர் பாலஜனகிராமன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை