உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / முதலுதவி குறித்து விழிப்புணர்வு

முதலுதவி குறித்து விழிப்புணர்வு

திருக்கனுார்: வாதானுார் உரிமை போராளிகள் சேவை குழு சார்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டு உயிர்காக்கும் முதலுதவியின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு உரிமை போராளிகள் சேவை குழு தலைவர் கஜபதி வரவேற்றார். திருக்கனுார் சப் இன்ஸ்பெக்டர் பிரியா கலந்து கொண்டு போதைபொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் விளைவுகள் குறித்து பேசினார். சோரப்பட்டு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் அதிகாரி ஆனந்த லட்சுமி உயிர் காக்கும் முதலுதவியின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார். இதில், வாதானுார் அன்னை சாரதா தேவி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வீரையன், ஆசிரியர் நாகராஜ், உதவி சப் இன்ஸ்பெக்டர் சொக்கலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். புதுச்சேரி உயிர்த்துளி குழு இளங்கோ பங்கேற்று, ரத்த தானத்தின் அவசியம் குறித்து பேசினார். தொடர்ந்து உரிமை போராளிகள் சேவை குழுவின் உறுப்பினர்கள் சதீஷ், திவாகர், பூங்கொடி சத்யபானு, ஜான்சி ஆகியோர் முதலுதவி அளிக்கும் முறைகள் குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை