உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பாரதிதாசன் மகளிர் கல்லுாரியில் எல்.பி.ஜி., குறித்து விழிப்புணர்வு

பாரதிதாசன் மகளிர் கல்லுாரியில் எல்.பி.ஜி., குறித்து விழிப்புணர்வு

புதுச்சேரி : பாரதிதாசன் மகளிர் கல்லுாரியில் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் எல்.பி.ஜி., காஸ் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.கல்லுாரி முதல்வர் ராஜிசுகுமார் தலைமை தாங்கினார். திருச்சி மண்டல விற்பனை பிரிவு தலைமை அதிகாரி ஜெயபிரகாஷ், உணவு கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.பி., மாறன், எல்.பி.ஜி., துணை மேலாளர் சம்பத்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.சமையல் காஸ் சிலிண்டரை பாதுகாப்பான முறையில் பயன்படுத்துவது குறித்து மாணவிகளுக்கு விளக்கம் அளித்தனர். நிகழ்ச்சியில், இந்திரா இண்டேன் காஸ் ஏஜென்சி சார்பில் பரசுராமன், சதிஷ்குமார், திலகவதி, ராஜலட்சுமி என்.எஸ்.எஸ்., அதிகாரி ஆரோக்கியமேரி உட்பட ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை