| ADDED : ஜூன் 28, 2024 06:20 AM
திருக்கனுார்: காட்டேரிக்குப்பம் போலீசார் சார்பில் சர்வதேச போதை பொருள் தடுப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.காட்டேரிக்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளியில் துவங்கிய ஊர்வலத்தை சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.சப் இன்ஸ்பெக்டர்கள் ஜானகிராமன், லுார்துநாதன், உதவி சப் இன்ஸ்பெக்டர் ராஜன் உள்ளிட்ட போலீசார் மற்றும் காட்டேரிக்குப்பம் அரசு பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்று, காட்டேரிக்குப்பம், லிங்காரெட்டிப்பாளையம் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று போதை பொருள் தடுப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.மாணவர்கள், போலீசார் போதைப்பொருள் தடுப்பு குறித்த உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர்.