உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / முதலியார்பேட்டை கோவிலில் பாலாலய பிரதிஷ்டை பூஜை

முதலியார்பேட்டை கோவிலில் பாலாலய பிரதிஷ்டை பூஜை

புதுச்சேரி : திருப்பணிகள் துவங்க உள்ளதை முன்னிட்டு, வன்னிய பெருமாள் கோவிலில் பாலாலய பிரதிஷ்டை நடந்தது.முதலியார்பேட்டையில் பழமைவாய்ந்த, வன்னிய பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு கும்பாபிேஷகம் நடத்தப்பட்டு 16 ஆண்டுகளாகி விட்டது. எனவே, மீண்டும் கும்பாபிேஷகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, திருப்பணி வேலைகள் துவங்க உள்ளது. இதை முன்னிட்டு, கோவிலில் யாகசாலை அமைக்கப்பட்டு பாலாலய பூஜைகள் கடந்த 1ம் தேதியன்று துவங்கியது. நேற்று காலை மூன்றாம் கால ேஹாமம் நடந்தது. யாகசாலையில் இருந்து கும்பங்கள் புறப்பாடாகி, பாலாலய பிரதிஷ்டை நடந்தது. கோஸக பட்டாச்சாரியார் தலைமையிலான குழுவினர் பூஜைகளை மேற்கொண்டனர்.விழாவில் சம்பத் எம்.எல்.ஏ., கோவில் நிர்வாக அதிகாரி வெங்கடேஸ்வரன், திருப்பணிக் குழுவினர், உபயதாரர்கள் மற்றும் ஊர் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி