உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரியாங்குப்பம் பள்ளிக்கு புதிய கட்டடம் பாஸ்கர் எம்.எல்.ஏ., கோரிக்கை

அரியாங்குப்பம் பள்ளிக்கு புதிய கட்டடம் பாஸ்கர் எம்.எல்.ஏ., கோரிக்கை

புதுச்சேரி: மானிய கோரிக்கைகள்மீதான விவாதத்தில் பாஸ்கர் எம்.எல்.ஏ., பேசியதாவது:அரியாங்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளி நுாறு ஆண்டுகள் கடந்து இடியும் நிலையில் உள்ளது. பள்ளிக்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும். நாளுக்கு நாள் குற்றம் அதிகரித்து வருவதால் அரசு மற்றும் தனியார் பள்ளி கல்லுாரிகளில் கண்காணிப்பு கேமரா பொறுத்துவதை கட்டாயமாக்க வேண்டும். பள்ளி, கல்லுாரிகளில் பையோமெட்ரிக் வருகையை பதிவு செய்ய வேண்டும். மாணவர்களின் வருகையை எஸ்.எம்.எஸ்., மூலம் தெரிவிக்க வேண்டும். நீட் நுழைவு தேர்வுக்கு பயிற்சி அளிப்பதை போன்று ஜே.இ.இ., நுழைவு தேர்வு பயிற்சி அளிக்கவும் அரசு சார்பில் பயிற்சி மையங்கள் அமைக்க வேண்டும். முருங்கபாக்கம் மேல்நிலைப்பள்ளியில் தற்போது பையாலஜி, பியூர் சயின்ஸ் போன்ற படிப்புகள் மட்டுமே உள்ளது. இங்கு வணிகம், கணக்கு பதிவியல்,கம்ப்யூட்டர் சயின்ஸ் போன்ற படிப்புகளை துவங்க வேண்டும். சுனாமி பேரிடரால் பாதிக்கப்பட்ட வீராம்பட்டிணம் பகுதியில் இன்னும் மின் புதை வடம் அமைக்க வேண்டும். ஸ்மார்ட் சிட்டி, நகராட்சி, பஞ்சாயத்து அலுவலர்கள் இடையே ஒருங்கிணைப்பு இல்லாததால் தெரு விளக்குகள் சரி செய்யாமல் இருண்டு கிடக்கிறது. அரியாங்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முழு நேர மருத்துவர்களை நியமிக்க வேண்டும். அரியாங்குப்பம், வீராம்பட்டிணத்தில் யோகா பயிற்சி மையம், மூலிகை வனங்கள் ஏற்படுத்த வேண்டும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை