உள்ளூர் செய்திகள்

பைக் திருட்டு /

புதுச்சேரி : முத்தியால்பேட்டையில் வீட்டின் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக் மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். புதுச்சேரி, முத்தியால்பேட்டை சாலை தெருவை சேர்ந்தவர் சங்கர், 38; கூலி தொழிலாளி. இவர் கடந்த 22ம் தேதி மதியம், தனது பைக்கை, வீட்டு வாசலில் நிறுத்தி வைத்துவிட்டு, சாப்பிட உள்ளே சென்றுள்ளார். பின்னர், வந்து பார்த்தபோது, பைக்கை காணவில்லை. அக்கம், பக்கத்தில் தேடியும் பைக் கிடைக்கவில்லை.சங்கர் அளித்த புகாரின் பேரில், முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி