உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இன்று கூடுகிறது பா.ஜ., சிறப்பு செயற்குழு புயலை கிளப்ப அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் ரெடி

இன்று கூடுகிறது பா.ஜ., சிறப்பு செயற்குழு புயலை கிளப்ப அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் ரெடி

புதுச்சேரி : முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு எதிராக பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ள பரபரப்பான சூழ்நிலையில், பா.ஜ., சிறப்பு செயற்குழு இன்று கூடுகிறது. லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயம் தோல்வியடைந்ததை தொடர்ந்து, தங்கள் கட்சியை சேர்ந்த அமைச்சர்களை மாற்ற வேண்டும் என, பா.ஜ.,வை சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். அவர்கள், முதல்வருக்கு எதிராகவும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.இதையடுத்து, மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா சமீபத்தில் புதுச்சேரிக்கு வந்தார். அதிருப்தி பா.ஜ., எம்.எல்.ஏ.,க்களை நேரில் சந்தித்து சமாதானப்படுத்தினார். அதை ஏற்காத எம்.எல்.ஏ.,க்கள், உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து முறையிட முடிவு செய்துள்ளனர்.இதுபோன்ற சூழ்நிலையில், இன்று 14ம் தேதி, சிறப்பு செயற்குழு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை 10:30 மணியளவில், சுகன்யா கன்வென்ஷன் சென்டரில் நடக்கும் செயற்குழுவில் மத்திய அமைச்சர் கிஷன்ரெட்டி, மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா கலந்து கொள்கின்றனர்.சிறப்பு செயற்குழு கூட்டத்தை தொடர்ந்து, அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களை தனித்தனியே சந்தித்து அவர்களது கருத்துகளை கேட்டறிய மத்திய அமைச்சர் முடிவு செய்துள்ளார். பின், முதல்வர் ரங்கசாமியையும் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளதால், புதுச்சேரி அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி