உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பா.ஜ ., மாநிலத்தலைவர் இரு சக்கர வாகன பிரசாரம்

பா.ஜ ., மாநிலத்தலைவர் இரு சக்கர வாகன பிரசாரம்

புதுச்சேரி: லாஸ்பேட்டை தொகுதியில், பா.ஜ வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து, இரு சக்கரவாகனத்தில், மாநிலத்தலைவர் செல்வகணபதி பிரசாரம் செய்தார்.புதுச்சேரி தொகுதியில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், பா.ஜ வேட்பாளர் நமச்சிவாயம் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து, புதுச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் பல்வேறு விதங்களில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அதேபோல் லாஸ்பேட்டை தொகுதியில், பா.ஜ ., இளைஞர் அணி சார்பில், இரு சக்கர வாகன பிரசாரம் நடந்தது.இதில், பா.ஜ., மாநிலத் தலைவர் செல்வகணபதி எம்.பி., பங்கேற்று ஓட்டு சேகரித்தார். அவருடன் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை