உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / போலீசார் மீது பா.ஜ.,வினர் புகார் மனு

போலீசார் மீது பா.ஜ.,வினர் புகார் மனு

புதுச்சேரி : பிரதமர் மோடி குறித்து சமூகவலைதளத்தில் அவதுாறு பரப்பிய போலீசார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்ககோரி சீனியர் எஸ்.பி.,யிடம் பா.ஜ., வினர் புகார் மனு அளித்துள்ளனர். இது குறித்து பா.ஜ., ஊடகப்பிரிவு மாநில துணைத் தலைவர் விமல் ஈஸ்வர் மற்றும் நிர்வாகிகள் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது.புதுச்சேரி போலீசில் பணியாற்றும் ஒருவர் தனது சமூக வலைத் தளத்தில் பிரதமர் மோடி, அயோத்தி பாலராமர் , மத்திய அமைச்சர்கள், முன்னாள் கவர்னர்கள் குறித்து தொடர்ந்து அவதுாறு பதிவுகளை பதிவிட்டு உள்ளார். மேலும், தற்போது லோக்சபா தேர்தல் பிரசாரத்தை முடித்துக் கொண்டு, தமிழகத்தின் விவேகானந்தா மண்டபத்தில் பிரதமர் மோடி மேற்கொண்ட தொடர் 45 மணிநேர தியான நிகழ்ச்சியை அவமதிக்கும் வகையிலும் அந்த பதிவுகள் அமைந்துள்ளது.ஆகையால், தொடர்ந்து தேச விரோத மற்றும் அரசு விரோத செயல்பாடுகளை செய்து வரும் போலீஸ்காரர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது சமூக வலைத்தள பக்கத்தினை முடக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை