உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பா.ஜ.,வினர் ஓட்டு சேகரிப்பு

பா.ஜ.,வினர் ஓட்டு சேகரிப்பு

புதுச்சேரி : லாஸ்பேட்டை தொகுதியில் பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து, அக்கட்சியின் நிர்வாகிகள் வீடு வீடாக சென்று ஓட்டு சேகரித்தனர்.புதுச்சேரி லோக்சபா தொகுதியில், தே.ஜ., கூட்டணி சார்பில், பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயம் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து அவரது கட்சி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் பிரசாரம் இன்றுடன் நிறைவு பெற உள்ளது.அசோக் நகர், லாஸ்பேட்டை, பெத்துச்செட்டிப்பேட்டை, செல்லப்பெருமாள்பேட்டை, மற்றும் மகாவீர் நகர் ஆகிய பகுதிகளில், லாஸ்பேட்டை தொகுதி பொறுப்பாளர் செல்வாஸ் அசோகன் மற்றும் தொகுதி தலைவர் ஜெயபிரகாஷ் தலைமையில், வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி நிர்வாகிகள் ஓட்டு சேகரித்தனர்.பொறுப்பாளர்கள் பன்னீர்செல்வம், வேலு, மூத்த உறுப்பினர் நமச்சிவாயம், சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை