மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
8 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
8 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
8 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
8 hour(s) ago
காரைக்கால்: சீன எல்லையில் மரணம் அடைந்த எல்லை பாதுகாப்பு படை வீரரின் உடல் அவரது சொந்த ஊரான திருப்பட்டினம் போலகம் கொண்டுவரப்பட்டு 24 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. அமைச்சர் திருமுருகன் உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.காரைக்கால், திருப்பட்டினம், போலகம் வீரன் கோவில் தெருவை சேர்ந்தவர் சக்கரவர்த்தி மகன் பிரேம்குமார், 47;இந்திய திபெத் எல்லை பாதுகாப்பு படைவீரர்.இவரது மனைவி செவ்வந்தி. ஐந்து வயது கீர்த்தி என்ற மகன் உள்ளார்.கடந்த மூன்று மாதங்களுக்கு முன், சொந்த ஊருக்கு வந்த பிரேம்குமார் மீண்டும் பணிக்கு திரும்பினர். பின், சீனா திபெத் எல்லையில் ரோந்து பணியில் ஈடுப்பட்டபோது அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 30ம் தேதி மரணம் அடைந்தார்.அவரது உடல் விமானம் மூலம் நேற்று முன்தினம் சென்னை கொண்டு வரப்பட்டடது. பின், ராணுவ வாகனம் மூலம் அவரது சொந்த ஊரான காரைக்கால் திருப்பட்டினத்திற்கு நள்ளிரவு கொண்டு வரப்பட்டது.உடன் வந்த ராணுவ வீரர்கள் அவரது வீட்டில் உடலை அஞ்சலிக்கு வைத்தனர். நேற்று காலை பிரேம்குமார் உடலுக்கு அமைச்சர் திருமுருகன், நாகதியாகராஜன் எம்.எல்.ஏ., மற்றும் எஸ்.பி., சுப்ரமணியன் மற்றும் உள்ளிட்ட அரசியல் கட்சியினர், பொது மக்கள் அஞ்சலி செலுத்தினர்.இறுதி சடங்கிற்கு முன், அவரது உடலில் போர்த்தப்பட்ட தேசிய கொடி, அவரது மனைவி செவ்வந்தியிடம் வழங்கப்பட்டது.பின், நேற்று காலை 11:00 மணி அளவில் அவரது உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு போலகம் பைபாஸ் சாலையில் உள்ள இடுகாட்டில் 24 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago