உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பாம்பு கடித்து சிறுவன் பலி

பாம்பு கடித்து சிறுவன் பலி

திருவெண்ணெய்நல்லுார், : திருவெண்ணெய்நல்லுார் அருகே பாம்பு கடித்து சிறுவன் பலியானார்.திருவெண்ணெய்நல்லுார் அடுத்த கருவேப்பிலைபாளையம் கிராமத்தை சேர்ந்த மருதமலை மகன் அய்யனார், 15; 9ம் வகுப்பு படித்துள்ளார். இவர், நேற்று காலை 10:30 மணியளவில் அவரது கூரை வீட்டில் துாங்கியபோது. பாம்பு கடித்து விட்டதாக பெற்றோரிடம் கூறினார்.அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் விழுப்புரம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சிறுவன் உயிரிழந்தார்.புகாரின்பேரில் திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை