உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாரியம்மன் கோவில் பிரம்மோற்சவ விழா

மாரியம்மன் கோவில் பிரம்மோற்சவ விழா

வில்லியனுார் : கரசூர் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் பிரம்மோற்சவ விழாவில் நேற்று சக்தி கரகம் மற்றும் சாமி வீதியுலா நடந்தது.சேதராப்பட்டு அருகே உள்ள கரசூர் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் ஆலய பிரமோற்சவ விழா கடந்த 31ம் தேதி இரவு கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து நடந்து வரும் விழாவில் காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிேஷகமும், தீபாராதனையும் நடந்து வருகிறது.விழாவில் நேற்று இரவு 7:00 மணியளவில் சக்தி கரகம் மற்றும் சாமி வீதியுலா நடந்தது. இன்று(4ம் தேதி) பகல் 12:30 மணியளவி பிடாரி அம்மன் உத்தரவு பெருதல், அதனை தொடர்ந்து முத்துமாரியம்மனுக்கு சாகை வார்த்தல் நிகழ்ச்சியும், மாலை ஊரனி பொங்கல் வைத்தல், இரவு 7:00 மணிக்கு மேல் கும்பம் கொட்டுதல் அதனை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட சுவாமி வீதியுலா நடக்கிறது. நாளை (5ம் தேதி) மஞ்சள் நிராட்டு விழா நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை