உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  பி.எஸ்சி., நர்சிங் சேர்க்கை சென்டாக் புதிய அறிவிப்பு

 பி.எஸ்சி., நர்சிங் சேர்க்கை சென்டாக் புதிய அறிவிப்பு

புதுச்சேரி: முதலாம் ஆண்டு பி.எஸ்சி., நர்சிங் படிப்புக்கு சென்டாக் அரசு இடஒதுக்கீட்டு இடங்களில் சேர பொது நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என முன்பே தெரிவிக்கப்பட்டது. சென்டாக் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான புதிய பதிவு, சென்டாகின் www.centacpuducherry.inஇணையதளத்தில் துவங்கப்பட்டுள்ளது.பி.எஸ்சி., நர்சிங் படிப்பிற்கு விண்ணப்பித்தாலும் புதிதாக சென்டாக் இணைய தளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இல்லை என்றால் புதுச்சேரி பொது நர்சிங் நுழைவு தேர்வு எழுத முடியாது.கதிர்காமம் இந்திராகாந்தி மருத்துவக்கல்லுாரி யில் உள்ள நர்சிங் கல்லுாரி, அன்னை தெரசா பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிலையம் (புதுச்சேரி, காரைக்கால்) ஆகியவற்றில் உள்ள பி.எஸ்சி., நர்சிங் சுயநிதி ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் என்.ஆர்.ஐ., இடங்கள் நீட் மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும். இதற்கான கடைசி நாள் வருகிற 25ந் தேதி ஆகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை