மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
28 minutes ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
28 minutes ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
39 minutes ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
40 minutes ago
புதுச்சேரி: புதுச்சேரியில் பி.எஸ்.என்.எல்., சிறப்பு மேளா விற்பனை முகாம் இன்று முதல் தொடங்கி நான்கு நாட்களுக்கு நடக்கிறது.புதுச்சேரி பி.எஸ்.என்.எல்., நிறுவன பொது மேலாளர் விடுத்துள்ள செய்திகுறிப்பு:பி.எஸ்.என்.எல்., சிறப்பு மேளா விற்பனை முகாம் இன்று 18ம் தேதி முதல் துவங்கி வரும் 21ம் தேதி வரை ஆகிய 4 நாட்கள் நடக்கிறது. இந்த முகாம், மேட்டுப்பாளையம், முதலியார்பேட்டை போஸ்ட் ஆபீஸ் அலுவலகம் அருகில், மதகடிப்பட்டு மகாத்மா காந்தி மருத்துவக்கல்லுாரி அருகில், கரியமாணிக்கம், திருக்கனுார், அரும்பார்த்தபுரம், வில்லியனுார், ரங்கப்பிள்ளை வீதி பொது தொலைபேசி நிலைய அலுவலகம் மற்றும் எஸ்.பி.ஐ., தலைமை அலுவலக இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முகாமில், வாடிக்கையாளர்கள் தங்களுடைய தற்போதைய எண்ணை மாற்றாமல், அதிவேக எப்.டி.டி.எச். தொழில்நுட்பத்திற்கு தங்கள் லேண்ட்லைன் எண்ணை இலவசமாக மாற்றி கொள்ளலாம். அதற்கான மோடம் முற்றிலும் இலவசம். புதிய எப்.டி.டி.எச்., இணைப்பு 329 ரூபாய் முதல் மற்றும் கிராமங்களில் 6 மாதங்களுக்கு 999 ரூபாய்க்கு கிடைக்கும். 269 ரூபாய் மதிப்புள்ள சிம் கார்ட் 50 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. இந்த சிம் கார்டில் 45 நாட்களுக்கு, ஒரு நாளைக்கு 2ஜி டேட்டா அளவில்லாமல் அழைப்புகள் மற்றும் 100 எஸ்.எம்.எஸ் இலவசம். பிற நெட் ஒர்க்கில் இருந்து எம்.என்.பி., மூலம் பி.எஸ்.என்.எல்., க்கு வருபவர்களுக்கு 269 ரூபாய் மதிப்புள்ள சிம் முற்றிலும் இலவசம். தற்போதுள்ள 2ஜி, 3ஜி சிம் வைத்திருப்பவர்கள் இலவசமாக 4ஜி சிம்மிற்கு மேம்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.
28 minutes ago
28 minutes ago
39 minutes ago
40 minutes ago