மேலும் செய்திகள்
வி.மணவெளி பள்ளிக்கு கூடுதல் கட்டடம் திறப்பு
19 hour(s) ago
வாலிபர்கள் மீது தாக்குதல் 3 பேர் மீது வழக்கு பதிவு
19 hour(s) ago
அரசு பள்ளியில் கழிவறை திறப்பு
19 hour(s) ago
வாய்க்கால் அமைக்கும் பணி
19 hour(s) ago
புதுச்சேரி: புதுச்சேரியில் மூன்று நாட்களுக்கு நடக்கும், பி.எஸ்.என்.எல் சிறப்பு மேளா விற்பனை முகாம் இன்று துவங்க உள்ளதாக முதன்மை பொதுமேலாளர் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:புதுச்சேரி, பி.எஸ்.என்.எல் சிறப்பு மேளா விற்பனை முகாம் இன்று துவங்கி, நாளை மறுதினம் வரை, மொத்தம் மூன்று நாட்களுக்கு நடக்கிறது.இந்த முகாம், மேட்டுப்பாளையம், முதலியார்பேட்டை தபால் நிலையம் அலுவலகம் அருகில், ஜிப்மர் கெஸ்ட் ஹவுஸ் அருகில், கரியமாணிக்கம், திருக்கனுார், அரும்பார்த்தபுரம், வில்லியனுார், ரங்கப்பிள்ளை வீதி பொது தொலைபேசி நிலைய அலுவலக இடங்களில், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.வாடிக்கையாளர்கள் தங்களுடைய எண்ணை மாற்றாமல் அதிவேக எப்.டி.டி.எச் தொழில்நுட்பத்திற்கு லேண்ட்லைன் எண்ணை இலவசமாக மாற்றி கொள்ளலாம். அதற்கான மோடம் முற்றிலும் இலவசம்.புதிய எப்.டி.டி.எச் இணைப்பு, ரூ.329 முதல் கிராமப்புறங்களில் ஆறு மாதங்களுக்கு, ரூ.999,க்கு கிடைக்கும். ரூ.269 மதிப்புள்ள சிம் கார்ட், ரூ.50.,க்கு வழங்கப்படுகிறது. இந்த சிம் கார்டில், 45 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு, 2ஜி.பி டேட்டா, அளவில்லாமல் அழைப்புகள் மற்றும் 100 எஸ்.எம்.எஸ் இலவசம். பிற நெட்வொர்க்கில் இருந்து, பி.எஸ்.என்.எல் வருபவர்களுக்கு, ரூ.269 மதிப்புள்ள சிம் முற்றிலும் இலவசம். தற்போதுள்ள, 2 ஜி மற்றும் 3 ஜி சிம் வைத்திருப்பவர்கள், இலவசமாக, 4ஜி சிம்மிற்கு மேம்படுத்தி கொள்ளலாம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
19 hour(s) ago
19 hour(s) ago
19 hour(s) ago
19 hour(s) ago