உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அனுமதியின்றி பேனர் வைத்த 8 பேர் மீது வழக்கு

அனுமதியின்றி பேனர் வைத்த 8 பேர் மீது வழக்கு

புதுச்சேரி : புதுச்சேரியில் அனுமதியின்றி பேனர் வைத்த 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.புதுச்சேரியில் தடையை மீறி ஏராளமான பேனர்கள் வைக்கப்படுகிறது. குறிப்பாக டிராபிக் சிக்னல்களில் அதிக அளவில் விளம்பர பேனர்கள் வைப்பதால், விபத்து மற்றும் டிராபிக் பிரச்னைகள் ஏற்படுகிறது. புதுச்சேரி முழுதும் வைக்கப்பட்டுள்ள பேனர்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.வடக்கு சப்கலெக்டர் அர்ஜூன்ராமக்கிருஷ்ணன் நேற்று முன்தினம் புதுச்சேரி முழுதும் ஆய்வு செய்து, தடையை மீறி பேனர்கள் வைத்தவர்கள் மீது புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.அதன் தொடர்ச்சியாக நேற்றுமேட்டுப்பாளையம், ரெட்டியார்பாளையம், முதலியார்பேட்டை மரப்பாலம், பெரியக்கடை உள்ளிட்ட பகுதியில் பேனர் வைத்த 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

பெயரளவிற்கு நடவடிக்கை

அரசியல் கட்சி பிரமுகர்களின் பிறந்த நாளுக்கு அதிக அளவில் பேனர்கள் வைக்கின்றனர். பிறந்த நாள் கொண்டாடும் நபரின் தம்பிகளின் படம் மற்றும் பெயர்கள் கொட்டை எழுத்துக்களில் பேனரில் உள்ளது. ஆனால் போலீசாரோ பேனர் வைத்த அரசியல் கட்சி பிரமுகர்கள் மீது வழக்கு பதிவு செய்வதிற்கு பதில், மர்ம நபர்கள் பேனர் வைத்துள்ளதாக வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.மர்ம நபர்கள் என வழக்குப் பதிவு செய்வதால், அதே மர்ம நபரே மீண்டும் மீண்டும் பேனர் வைப்பர். இதனால் வழக்கு பதிவு செய்தும் எந்தவித பிரயோஜனமும் இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ