உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கம்பெனியில் மோசடி பங்குதாரர்கள் மீது வழக்கு

கம்பெனியில் மோசடி பங்குதாரர்கள் மீது வழக்கு

வில்லியனுார்: சேதராப்பட்டு அருகே தனியார் கம்பெனியில் 32.50 லட்சம் ரூபாய் மோசடி செய்த பங்குதாரர்கள் இருவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.சேதராப்பட்டு அருகே உள்ள கரசூர் கிராமத்தை சேர்ந்த சந்தோஷ்குமார் மனைவி பானுப்பிரியா. இவர் வில்லியனுார் பகுதியை சேர்ந்த போர்சிலம்பரசி மற்றும் ஆனந்த்குமார் ஆகியோருடன் கரசூரில் டி2 என் என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டு நவ., மாதம் போர்சிலம்பரசி மற்றும் ஆனந்தகுமார் இருவரும் கம்பெனியில் ரூ. 32.50 லட்சம் பணம் மோசடி செய்தது , தற்போது பங்குதாரர் பானுப்பிரியாவுக்கு தெரியவந்தது.இது குறித்து பானுப்பிரியா புகாரின் பேரில் மோசடி செய்த போர்சிலம்பரசி மற்றும் ஆனந்தகுமார் ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை