| ADDED : ஏப் 16, 2024 05:57 AM
புதுச்சேரி, : பல்லக்கு துாக்குவதில் ஏற்பட்ட பிரச்னையில் கோவில் குருக்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த சிவனடியாரை போலீசார் தேடிவருகின்றனர்.புதுச்சேரி தந்தை பெரியார் நகரை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம், 48; இவர் காந்தி வீதியில் உள்ள வேதபுரீஸ்வரர் கோவிலில், குருக்களாக பணி செய்து வருகிறார். கடந்த 4 நாட்களாக சாமி பல்லக்கு துாக்குவதில், கோவில் நிர்வாகத்திற்கும், சிவனடியார்களுக்கும் இடையே பிரச்னை இருந்து வருகிறது.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, கோவில் குருக்கள், கல்யாணசுந்தரம் நித்யபடி பூஜை, அர்த்த ஜாம பூஜைகள் செய்து வந்தார். தொடர்ந்து, பள்ளியறை சாமி பல்லக்கு புறப்பட்டு செல்லும் போது, பூஜையில் பங்கேற்ற, சிவனடியார் ராமலிங்கம், திடீரென கல்யாணசுந்தரத்தின் தலையில் வாத்தியத்தால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து, தப்பி சென்று விட்டார். அதில், பலத்த காயமடைந்த குருக்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.புகாரின் பேரில், பெரியக்கடை போலீசார் வழக்குப் பதிந்து, சிவனடியார் ராமலிங்கத்தை தேடிவருகின்றனர்.