| ADDED : ஜூன் 01, 2024 04:35 AM
புதுச்சேரி, : முன்விரோத தகராறில் தம்பதியை தாக்கிய 2 பேர் மீது வழக்குப் பதிந்தனர்.திருக்கனுார் அடுத்த மணலிப்பட்டு கிழக்கு தெருவை சேர்ந்தவர் சக்திவேல், 44; கூலி தொழிலாளி.இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் தனலட்சுமி. இருவருக்கும் இடையே நிலப் பிரச்னை தொடர்பாக முன்விரோதம் உள்ளது.கடந்த 28ம் தேதி இரு தரப்பினரிடையே, மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில், தனலட்சுமி மற் றும் சதீஷ்குமார் ஆகியோர் இணைந்து, சக்திவேல் அவரது மனைவி ஜெயந்தியை திட்டி, கல்லால் தாக்கினர். சக்திவேல் அளித்த புகாரின் பேரில் சதிஷ்குமார் உட்பட இருவர் மீது திருக்கனுார் சப் இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.