| ADDED : ஏப் 24, 2024 11:01 PM
திருக்கனுார்: மண்ணாடிப்பட்டுதொகுதியில் காங்., பிரசாரத்தின் போது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக காங்., நிர்வாகி சுவாமிநாதன் மீது போலீசார்வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.புதுச்சேரி மாநில லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு கடந்த 19ம் தேதி நடந்தது. இதையொட்டி,மண்ணாடிப்பட்டு தொகுதியில் கடந்த 5ம் தேதி காங்., வேட்பாளர் வைத்திலிங்கம் திறந்த வேனில் பிரசாரம் மேற்கொண்டார்.அப்பொழுது காங்., பிரசாரத்தில் 20 பைக்குகளில் பேரணியாக செல்வதற்காக காங்., நிர்வாகி சுவாமிநாதன் தேர்தல் துறையிடம் அனுமதி பெற்றிருந்தார். ஆனால், அனுமதி பெற்ற இருபது வாகனங்களுக்கு மேலாக கூடுதலாக பைக்குகள் பிரசாரத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதுகுறித்து மண்ணாடிப்பட்டு தொகுதி தேர்தல் துறை கண்காணிப்பாளர் இளவரசன் வீடியோ ஆதாரத்துடன் காட்டேரிக்குப்பம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக காங்., நிர்வாகி சுவாமிநாதன் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.