உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கடைக்காரர் மீது தாக்குதல் மூவர் மீது வழக்கு பதிவு

கடைக்காரர் மீது தாக்குதல் மூவர் மீது வழக்கு பதிவு

அரியாங்குப்பம்: முன்விரோத தகராறில் மெடிக்கல் கடை உரிமையாளரை தாக்கியவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அரியாங்குப்பத்தைச் சேர்ந்தவர் ஞானவேல், 26, வீராம்பட்டினம் சாலையில், மெடிக்கல் ஷாப் நடத்தி வருகிறார். இவருக்கும், மெடிக்கல் ஷாப் எதிர் வீட்டில் வசிக்கும் ராஜேந்திரன் என்பவருக்கு முன்விரோதம் இருந்தது. நேற்று முன்தினம் இவர்களுக்கு இடையே மீண்டும் வாய்த்தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ராஜேந்திரன், அவரது மனைவி புவனேஸ்வரி, மகன் கணேஷ் சேர்ந்து ஞானவேலை தாக்கினர். புகாரின் பேரில், அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை