உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சாகை வார்த்தல் விழா

சாகை வார்த்தல் விழா

திருக்கனுார்: கூனிச்சம்பட்டு, கே.ஆர்.பாளையம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் 33ம் ஆண்டு சாகை வார்த்தல் விழா நேற்று நடந்தது. திருக்கனுார் அடுத்த கூனிச்சம்பட்டு, கே.ஆர்.பாளையம் தீயணைப்பு நிலையம் எதிரே புற்று வடிவில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் 33ம் ஆண்டு சாகை வார்த்தல் மற்றும் கருப்பண்ணசாமிக்கு முதலாம் ஆண்டு கிடாவெட்டு விழா நேற்று நடந்தது. இதையொட்டி, காலை 6:00 மணிக்கு அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், பின்னர் சங்கராபரணி ஆற்றங்கரையிலிருந்து சக்தி கரகம் எடுத்து வரப்பட்டு, அம்மனுக்கு காலை 11:00 மணிக்கு சாகை வார்த்தல் நடந்தது. தொடர்ந்து, காலை 11:45க்கு கருப்பண்ண சுவாமிக்கு கிடா வெட்டுதலும், 3:00 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், கூனிச்சம்பட்டு, கே.ஆர்.பாளையம் கிராமங்களைச் சேர்ந்த திரளான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, இரவு 7:00 மணிக்கு அங்காளபரமேஸ்வரி சிங்க வாகனத்திலும், கருப்பண்ணசாமி குதிரை வாகனத்திலும் வீதியுலா நடந்தது. இரவு 10:00 மணிக்கு கும்பம் படைத்தல் நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை