உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மின் உற்பத்தியில் என்.எல்.சி., அபார வளர்ச்சி சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி தகவல்

மின் உற்பத்தியில் என்.எல்.சி., அபார வளர்ச்சி சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி தகவல்

நெய்வேலி : என்.எல்.சி., நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் பழுப்பு நிலக்கரி உற்பத்தியில் 26 சதவீதமும், மின் உற்பத்தியில் 10 சதவிதம் வளர்ச்சியை எட்டியுள்ளதாக அந்நிறுவனத்தின் சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி தெரிவித்தார்.இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:என்.எல்.சி., நிறுவனம், நடப்பு நிதியாண்டின் (2024- 25) முதல் காலாண்டில், 61.72 லட்சம் டன்கள் பழுப்பு நிலக்கரி உற்பத்தியை எட்டி, 22.12 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டு உற்பத்தியில் ஒப்பிடுகையில் 11.18 லட்சம் டன்கள் அதிகம்.நிலக்கரி உற்பத்தியில், இந்நிறுவனம் முதல் காலாண்டில், 28.46 லட்சம் டன்கள் எட்டியுள்ளதன் மூலம், 35.27 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இந்நிறுவனம், தனது பழுப்பு நிலக்கரி மற்றும் நிலக்கரி உற்பத்தியில், கூடுதலாக 90.18 லட்சம் டன்களை எட்டியுள்ளது.மின் உற்பத்திய 7,553.62 மில்லியன் யூனிட் ஆக உயர்ந்துள்ளது. இது கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் பெற்ற மின் உற்பத்தியைவிட 10.38 சதவீதம் அதிகமாகும். புதுப்பிக்கத்தக்க மின்னுற்பத்தி 546.63 மில்லியன் யூனிட்டாக உயர்ந்துள்ளது.நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு 5.28 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும், நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை ரூ. 228.10 இருந்து ரூ. 240.15 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை