உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மோடி, சந்திரபாபு நாயுடுவிற்கு முதல்வர் ரங்கசாமி வாழ்த்து

மோடி, சந்திரபாபு நாயுடுவிற்கு முதல்வர் ரங்கசாமி வாழ்த்து

புதுச்சேரி : சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், தே.ஜ., கூட்டணி வெற்றி பெற்றதன் மூலம், நரேந்திர மோடி, மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்க உள்ளார்.இந்நிலையில், பிரதமர் மோடிக்கு, முதல்வர் ரங்க சாமி, வாழ்த்து செய்தி அனுப்பி உள்ளார். அதில், 'லோக்சபா தேர்தலில், தாங்கள் வெற்றி பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.தங்கள் வழிகாட்டுதலும், இடைவிடாத சேவையும், இந்த மாபெரும் வெற்றிக்கு வழி வகுத்தது. அதுமட்டுமின்றி, தே.ஜ., கூட்டணியை தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சிக்கு கொண்டு வந்துள்ளது.தே.ஜ., கூட்டணி மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை, இது காட்டுகிறது. இந்த வெற்றி, உங்கள் வெற்றி மகுடத்தில், மேலும் ஒரு வைரக்கல்லை பதித்துள்ளது. தங்கள் அசாத்திய வெற்றிக்கு எனது நல்வாழ்த்துக்கள்,' என்று தெரிவித்துள்ளார்.அதேபோல, நடந்து முடிந்த ஆந்திர சட்டசபை தேர்தலில், வெற்றி பெற்று முதல்வராக பதவியேற்க உள்ள சந்திரபாபு நாயுடுவிற்கும், முதல்வர் அனுப்பியுள்ள வாழ்த்து செய்தியில், 'ஆந்திர மாநில சட்டசபை தேர்தலில், தாங்கள் வெற்றி பெற்றுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. தே.ஜ., கூட்டணியின் இந்த வெற்றி ஆந்திர குடிமக்களுக்கு, நிச்சயமாக புதிய நம்பிக்கையையும், பிரகாசமான வாழ்க்கையையும், கொண்டு வரும் என நம்புகிறேன்.இந்த வெற்றி தருணத்தில், தங்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்,' என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ