உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மத்திய நிதி குழுவில் சேர்க்கும் வரை 10 சதவீத கூடுதல் நிதி கேட்கிறோம் முதல்வர் ரங்கசாமி தகவல்

மத்திய நிதி குழுவில் சேர்க்கும் வரை 10 சதவீத கூடுதல் நிதி கேட்கிறோம் முதல்வர் ரங்கசாமி தகவல்

புதுச்சேரி: புதுச்சேரியை மத்திய நிதி குழுவில் சேர்க்கும் வரை 10 சதவீத நிதியை உயர்த்தி வழங்க வலியுறுத்தி வருகிறோம் என, முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.புதுச்சேரி சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது, அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., பேசுகையில்; புதுச்சேரி மாநிலம் நிதிக்குழுவில் சேர்க்கப்படவில்லை. மத்திய அரசிடம் முறையீடு செய்யப் படுமா.முதல்வர் ரங்கசாமி; மத்திய நிதி குழு வறையறைக்குள் புதுச்சேரி சேர்க்க உள்துறை, நிதி அமைச்சகத்திடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். மத்திய நிதி குழுவின் வரி பகிர்மானம், மாநிலங்களுக்கு மட்டுமே பொருந்தும். யூனியன் பிரதேசங்களுக்கு பொருந்தாது என மத்திய அரசு கூறியுள்ளது.மத்திய நிதி குழுவில் சேர்க்கும் வரை, மத்திய நிதி ஆணைய மானியம் போல் சூத்திரத்தின் அடிப்படையில் மத்திய நிதி உதவியை நிர்ணயிக்கும் வரை புதுச்சேரிக்கு 10 சதவீதம் நிதி உயர்த்தி வழங்க கோட்டு வருகிறோம்.முதல்வர் ரங்கசாமி; எம்.எல்.ஏ.,வின் ஆதங்கம் புரிகிறது. மக்கள் ஆதங்கமும் புரிகிறது. நமக்கு மாநில அந்தஸ்து தர மத்திய அரசை கேட்கிறோம். பதில் சரியாக கிடைக்கவில்லை.செந்தில்குமார் எம்.எல்.ஏ.; மத்திய அரசுக்கு தேவைப்படும் நேரத்திற்கு புதுச்சேரியை மாநிலமாக கருதுவது ஜி.எஸ்.டி.யில், தேவையில்லாத நேரத்தில் யூனியன் பிரதேசமாக கருதுகிறது. முதல்வர் ரங்கசாமி; அதற்கு தான் மாநில அந்தஸ்து தேவை.அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., மக்களை ஏமாற்றுகிறீர்கள் என கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ