உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ரேஷன் கடைகள் திறந்து அரிசி உணவு பொருட்கள் வழங்கப்படும் முதல்வர் ரங்கசாமி உறுதி

ரேஷன் கடைகள் திறந்து அரிசி உணவு பொருட்கள் வழங்கப்படும் முதல்வர் ரங்கசாமி உறுதி

பாகூர் : புதுச்சேரி லோக்சபா தேர்தல் பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து நேற்றிரவு ஏம்பலம் தொகுதியில் முதல்வர் ரங்கசாமி பிரசாரம் செய்தார்.முன்னதாக, கோர்க்காடு பகுதியில் முதல்வர் ரங்கசாமி பிரசாரத்தை துவங்கி பேசியதாவது:மத்தியில் எந்த ஆட்சி இருக்கிறதோ, அந்த கட்சி எம்.பி., இருந்தால், புதுச்சேரியில் மக்களுக்கான திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்த முடியும். கடந்த ஆட்சியில் முதியோர் உதவித்தொகையை ரூ.1 கூட உயர்த்தி கொடுக்கவில்லை. நம்முடைய அரசு பொறுப்பேற்ற பிறகு உதவித்தொகையை ரூ.500 உயர்த்தி கொடுத்தோம். பிள்ளைகளுக்கு மீண்டும் இலவச சைக்கிள், மடிகணினி கொடுத்தோம். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுத்தோம்.யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் எல்லா திட்டங்களையும் செயல்படுத்த அதிக நிதி வேண்டும். எனவே, யாரை நாம் எம்.பி.யாக அனுப்பினால் நமக்கு சாதகமான நிலை இருக்கும் என்பதை மக்கள் யோசிக்க வேண்டும்.மறுபடியும் பிரதமாக மோடிதான் வருவார் என்று கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. எனவே, பாஜ வேட்பாளர் நமச்சிவாயத்தை வெற்றி பெற வைத்து, அனுப்பினால் மத்திய அரசு அதிக நிதியை கொடுக்க வாய்ப்பு உண்டு. பெரிய தொழிற்சாலைகளை கொண்டுவர முடியும். வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுக்க முடியும்.மக்கள் அரிசி கேட்டுள்ளதால் தேர்தல் முடிந்த பிறகு ரேஷன் கடைகள் திறந்து இலவச அரிசி மட்டுமல்லாமல் உணவு பொருட்களும் வழங்கப்படும் என்றார். பிரசாரத்தின் போது, துணை சபாநாயகர் ராஜவேலு, லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ., மற்றும் என்.ஆர்.காங்., பா.ஜ., நிர்வாகிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ