உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / 5,416 விவசாயிகளுக்கு ரூ.4.36 கோடி ஊக்க தொகை முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார்

5,416 விவசாயிகளுக்கு ரூ.4.36 கோடி ஊக்க தொகை முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார்

புதுச்சேரி: புதுச்சேரி மாவட்டத்தில் 5,416 விவசாயிகளுக்கு 4.36 கோடி ரூபாய் ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார்.புதுச்சேரி அரசின் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறை மூலம் செயல்படுத்தப்படும் பயிர் உற்பத்தி திட்டத்தின் மூலம் உயர் ரக நெல் பாரம்பரிய நெல், கரும்பு, மணிலா, எள், பயிறு வகைகள், பருத்தி, சிறுதானிய பயிர்கள், தீவன புல்சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு உற்பத்தி ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.அதன்படி, புதுச்சேரி மாவட்டத்தில் 2023-24ம் ஆண்டிற்கு ஒட்டு மொத்தமாக 5,416 விவசாயிகளுக்கு 4 கோடியே 36 லட்சத்து 87 ஆயிரத்து 290 ரூபாய் ஊக்கத் தொகை வழங்கும் நிகழ்ச்சி சட்டசபை வளாகத்தில் நடந்தது. முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார்.அதில், சம்பா பருவத்தில் உயர் ரக நெல் சாகுபடி செய்த 4,858 பொது பிரிவு விவசாயிகளுக்கு ஊக்கத் தொகையாக ஒரு ஏக்கருக்கு 5 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் 3 கோடியே 95 லட்சத்து 54 ஆயிரத்து 650 ரூபாய், அட்டவணை பிரிவினை சேர்ந்த 446 விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 6 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் 29 லட்சத்து 76 ஆயிரத்து 900 ரூபாய் வழங்கப்பட உள்ளது.சம்பா பருவத்தில் பாரம்பரிய நெல் சாகுபடி செய்த 96 பொது விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 8 ஆயிரம் வீதம் 9 லட்சத்து 72 ஆயிரத்து 320 ரூபாய், அட்டவணை பிரிவை சேர்ந்த 7 விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 9 ஆயிரம் வீதம் மொத்தம் 29 ஆயிரத்து 340 ரூபாய் வழங்கப்பட உள்ளது.ஒருங்கிணைந்த விதை உற்பத்தி சான்றிப்பு திட்டத்தின் மூலம் நவரை மற்றும் சொர்ணவாரி பருவத்தில் விதை உற்பத்தி செய்த 9 விதை உற்பத்தியாளருக்கு 1 லட்சத்து 54 ஆயிரத்து 80 ரூபாய் வழங்கப்படும். இத்தொகை ஓரிரு நாளில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். நிகழ்ச்சியில் வேளாண் அமைச்சர் ஜெயக்குமார், வேளாண் துறை இயக்குனர் வசந்தகுமார், துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

விவசாயிகளுக்கு பணி ஆணை

விவசாயிகளுக்கு தேவையான டிராக்டர், பவர் டில்லர், நெல் நடவு இயந்திரம், களையெடுக்கும் இயந்திரம் மற்றும் மேம்படுத்தப்பட்ட உபகரணங்களை வாங்க மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் இந்தாண்டு முதல் தவணையாக மத்திய அரசிடமிருந்து பெறப்பட்ட 25 லட்சம் நிதியில், புதுச்சேரியை சேர்ந்த 12 பயனாளிகளுக்கு 13.51 லட்சத்திற்கான பணி ஆணையை முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை