உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கல்லுாரி மாணவர் தற்கொலை

கல்லுாரி மாணவர் தற்கொலை

திருக்கனுார்: காட்டேரிக்குப்பத்தில் தந்தை வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றதால் மனமுடைந்த கல்லுாரி மாணவர் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.காட்டேரிக்குப்பம் தெற்கு பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்தவர் அப்துல் ரகுமான். வெளிநாட்டில் (குவைத்) வேலை செய்து வருகிறார். இவரது மகன் அப்துல் ஹலீத், 20; மதகடிப்பட்டு தனியார் பொறியியல் கல்லுாரியில், மெக்கானிக் இன்ஜினியரிங் 2ம் ஆண்டு படித்து வந்தார்.கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக வெளிநாட்டு வேலை செய்துவிட்டு, கடந்த மூன்று மாதங்களுக்கு முன் அப்துல் ரகுமான் வீட்டிற்கு வந்தார். மீண்டும் தற்போது வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றார்.நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு வீட்டிற்கு வந்த தந்தை தன்னுடன் அதிக நாட்கள் தங்கவில்லை என மன அழுத்தத்தில் அப்துல் ஹலீத் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் அறையில் அப்துல் ஹலீத் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.தகவலறிந்த காட்டேரிக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அப்துல் ஹலீத் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். புகாரின் பேரில் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி