உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / 10 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய இந்திய கம்யூ., வலியுறுத்தல்

10 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய இந்திய கம்யூ., வலியுறுத்தல்

புதுச்சேரி: சென்டாக்கில் 10 சதவீத இ.டபிள்யு.எஸ்., இட ஒதுக் கீட்டை ரத்து செய்து மாண வர் சேர்க்கை நடத்த வேண்டுமென இந்திய கம்யூ., வலியு றுத்தியுள்ளது.இதுகுறித்து மாநில செயலாளர் சலீம் அறிக்கை:பா.ஜ., அரசால் இ.டபிள்யு.எஸ்., 10 சதவீத இட ஒதுக்கீடு சட்டம் கொண்டு வரப்பட்டது. இச்சட்டம் மாநிலங்களைப் பொறுத்தவரை இட ஒதுக்கீடு அமலாக்கத்தில் மாநில அரசுகளே தீர்மானிக்கலாம் என கூறுகிறது.அதனடிப்படையில் தமிழ்நாட்டில் இ.டபிள்யு.எஸ்., இட ஓதுக்கீடு அமலாக்கப்படவில்லை. ஆனால், புதுச்சேரியில் 2024ம் கல்வி ஆண்டில் இ.டபிள்யு.எஸ்., 10 சதவீத இடஒதுக்கீடு முறை நடைமுறைக்கு வருகிறது.தற்போது கலை, அறிவியல், வணிகம் பட்டப்படிப்புகளில் 8,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். ஆனால், 4,290 இடங்கள் மட்டும்தான் உள்ளன. இதில் 426 இடங்கள் இ.டபிள்யு.எஸ்.க்கு சேருகிறது.புதுச்சேரியில் சமூகத்தில் நலிவடைந்த முற்பட்ட வகுப்பினர் 2 சதவீதம் கூட இருக்க வாய்ப்பில்லை. அரசும் இதற்கான தரவுகளை கண்டறிய எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இதனால் ஆண்டுதோறும் மிகப் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை, மீன வர் ஆகிய பிரிவுகளுக்கு கிடைக்க வேண்டிய இடங்கள் பறிபோகின்றன. எனவே, மாநில அரசு ௧0 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்து, இந்த கல்வியாண்டு மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும்.இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி