உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி

குண்டும் குழியுமான சாலைநைனார்மண்டபம், மூகாம்பிகை நகர் 2வது குறுக்கு தெரு சாலை குண்டும் குழியுமாக கிடக்கிறது.சச்சிதானந்தம், முருங்கப்பாக்கம்.தாறுமாறாக செல்லும் வாகனங்கள்புதுச்சேரி, மரப்பாலம் சிக்னலில் பகல் நேரத்தில் போக்குவரத்து போலீசார் இல்லாததால்,வாகனங்கள் தாறுமாறாக செல்கிறது.முத்துக்குமரன், தேங்காய்த்திட்டு.விபத்து அபாயம்புதுச்சேரி, நுாறடிச்சாலை தாலுகா அலுவலகம்எதிரில் சாலையில் வரிசையாக நிறுத்தி வைக்கும் கார், ஆட்டோக்களால் விபத்து ஏற்படுகிறது. சிவராமன், புதுச்சேரி.நடவடிக்கை தேவைபுதுச்சேரி முழுதும் பஸ் நிறுத்தங்களில் நடுரோட்டில் நிறுத்துவதற்கு பதில், சாலையோரம் பஸ்கள் நிறுத்தி பயணிகளை இறக்க போக்குவரத்து துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.பத்மா, லாஸ்பேட்டை.குடிநீர் தட்டுப்பாடுதவளக்குப்பம் அண்ணா நகரில் குடிநீர் சரியாகவராமல் இருப்பதால் மக்கள் அவதிப்பட்டுவருகின்றனர்.சிவா, தவளக்குப்பம்.ைஹமாஸ் எரியுமா?வீராம்பட்டினம் மெயின் ரோட்டில் பல நாட்களாக ைஹமாஸ் விளக்குகள் எரியாமல் இருண்டுகிடக்கிறது. திருமால், வீராம்பட்டினம்.சுகாதார சீர்கேடு காமராஜர் நகர் ரெயின்போ நகர் 7வது குறுக்கு தெருவில் குப்பைகளை கொட்டுவதால், சுகாதாரசீர்கேடு ஏற்பட்டு வருகிறது.தனலட்சுமி, ரெயின்போ நகர். கழிவுநீர் தேக்கம்முருங்கப்பாக்கம் சுதானா நகர் 3வது குறுக்கு தெருவில் வாய்க்கால் அடைத்து கழிவுநீர் தேங்கி நிற்கிறது.சங்கர், முருங்கப்பாக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !