உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி...

சாலையில் இடையூறு

வழுதாவூர் சாலையில் இடையூறாக வாகனங்கள் நிறுத்துவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.கணபதி, வழுதாவூர்.

வடிகால் பணி மந்தம்

ராஜிவ்காந்தி சிக்னல் அருகில் கழிவுநீர்வாய்க்கால் பணி மந்தமாக நடப்பதால்,வாகனங்கள் செல்ல முடியாமல் அடிக்கடிபோக்குவரத்து ஸ்தம்பித்து விடுகிறது.ராஜ், புதுச்சேரி.

கூடுதல் போலீசார் தேவை

கொக்குபார்க் சந்திப்பில் தினமும் வாகனநெரிசல் ஏற்படுவதால், கூடுதலாகபோக்குவரத்து போலீசாரை நியமிக்க வேண்டும்.சரவணன், புதுச்சேரி.

பயணிகள் தவிப்பு

தற்காலிகமாக உள்ள பஸ் நிலையத்தில்,அடிப்படை வசதிகள் இல்லாமல் பயணிகள்அவதிப்பட்டு வருகின்றனர்.ரவி, முதலியார்பேட்டை. குருமாம்பேட் ஹவுஸ்சிங் போர்டு 8 மற்றும் 9வது தெரு சந்திப்பில் உள்ள ஹைமாஸ் விளக்கு பல ஆண்டுகளாக எரியவில்லை.அய்யனார், குருமாம்பேட்.

சாலையில் மண் அகற்றப்படுமா

வில்லியனுார் தட்டாஞ்சாவடி முதல்எம்.என்.குப்பம் வரையில், சாலை சென்டர் மீடியனையொட்டி, மண் மேடுகள் குவிந்துள்ளதால் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.பூபாலன், புதுச்சேரி.

குண்டும் குழியுமான சாலை

மூலக்குளத்தில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில், புதிதாக போடப்பட்டதார் சாலைகள் குண்டும் குழியுமாக மாறியுள்ளது.பிரபாகரன், மேட்டுப்பாளையம்.

மின் விளக்குகள் பழுது

தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை சந்திப்பில்மின் விளக்குகள் பழுதாகியுள்ளது.முத்துக்குமரன், புதுச்சேரி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை