புதுச்சேரி: முத்தியால்பேட்டை தொகுதி காங்., பொறுப்பாளரும், ஈரம் பவுண்டேஷன் நிறுவனருமான ராஜேந்திரன் தனது பிறந்தநாளை குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடினார். அவருக்கு, முன்னாள் முதல்வர் நாராயணசாமி, மாநில காங்., தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., சீனியர் துணைத் தலைவரும், ஒருங்கிணைப்பாளருமான தேவதாஸ், முன்னாள் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் ஆகியோர் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். எம்.எல்.ஏ.,க்கள் வைத்தியநாதன், நேரு, முன்னாள் அமைச்சர் கந்தசாமி, முன்னாள் எம்.எல்.ஏ., அனந்தராமன், இளைஞர் காங்., மாநில தலைவர் ஆனந்தபாபு உள்ளிட்ட காங்., நிர்வாகிகள், பிரமுகர்கள், தொழிலதிபர்கள் பலர் வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து, முத்தியால்பேட்டை தொகுதி ஏழை, எளிய பயனாளிகளுக்கு தட்டு வண்டி, தையல் இயந்திரம், புடவை போன்ற நலத்திட்ட உதவிகளை ராஜேந்திரன் வழங்கினார். பிறந்த நாளை முன் னிட்டு, முத்தியால் பேட்டை தொகுதி காங்., கட்சி அலுவலகம் திறக்கப் பட்டது. இவரது ஆதரவாளர்கள் தொகுதி முழுவதும் அன்னதானம் வழங்கி பிறந்தநாளை கொண்டாடினர்.