உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / காமராஜர் நகர் தொகுதி மக்களுக்கு காங்., ஒருங்கிணைப்பாளர் நன்றி

காமராஜர் நகர் தொகுதி மக்களுக்கு காங்., ஒருங்கிணைப்பாளர் நன்றி

புதுச்சேரி: லோக்சபா தேர்தலில் வைத்திலிங்கம் வெற்றி பெற ஓட்டளித்த, காமராஜர் நகர் தொகுதி மக்களுக்கு காங்., ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ் நன்றி தெரிவித்துள்ளார்.புதுச்சேரி லோக்சபா தேர்தலில், காங்., கட்சி வேட்பாளர் வைத்திலிங்கம் 1 லட்சத்து 36 ஆயிரத்து 516 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதையடுத்து, முன்னாள் முதல்வர் ராமச்சந்திரனை, காங்., ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ் மற்றும் வைத்திலிங்கம் எம்.பி., ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.இதுகுறித்து தேவதாஸ் கூறியதாவது:புதுச்சேரி மாநில பொதுமக்களுக்கும், காமராஜர் நகர் தொகுதி வாக்காளர்களுக்கும், வெற்றிக்கு இரவு பகல் பாராமல் கடுமையாக உழைத்த காங்., அனைத்து நிர்வாகிகளுக்கும், 'இண்டியா'கூட்டணி நிர்வாகிகளுக்கும் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.என்னை இந்த தொகுதியில் பொறுப்பாளராக நியமித்த, வைத்திலிங்கம் மற்றும் எனக்கு பக்கபலமாக இருந்து ஆதரவளித்த காமராஜர் நகர் தொகுதியின் அனைத்து பகுதியில் உள்ள நல்வாழ்வு சங்கங்களுக்கும், பொதுமக்களுக்கும், காங்., நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் மீண்டும் ஒருமுறை நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். காமராஜ் நகர் தொகுதியில் மக்கள் நல பணிகள் தொடர்ந்து நடைபெறும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ