உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மோட்டார் பிரிவு எஸ்.பி., குறித்து அமைச்சரிடம் காவலர்கள் புகார்

மோட்டார் பிரிவு எஸ்.பி., குறித்து அமைச்சரிடம் காவலர்கள் புகார்

புதுச்சேரி, போலீஸ் மோட்டார் வாகன பிரிவு எஸ்.பி. மற்றும் எஸ்.ஐ., மீது உள்துறை அமைச்சரிடம் காவலர்கள் புகார் அளித்தனர்.புதுச்சேரி போலீசில் மோட்டார் பிரிவு கோரிமேட்டில் இயங்கி வருகிறது. இதில், டிரைவர்கள் மற்றும் காவலர்கள் ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர். மோட்டார் வாகன பிரிவு போலீசார் நேற்று மாலை உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தை சந்தித்து புகார் மனு அளித்தனர்.அதில், மோட்டார் வாகன பிரிவு எஸ்.பி., மற்றும் எஸ்.ஐ., இருவரும் வார விடுப்பு அளிப்பது இல்லை. ஓய்வு பெறும் நிலையில் உள்ள காவலர்களை காலையில் ரோல்கால் வரவழைத்து சிரமப்படுத்துதல், ஒரு தலைபட்சமாக நடந்து கொள்வதால் மன, உலைச்சலில் பணியாற்றி வருவதாக புகார் தெரிவித்தனர்.காவலர்களின் குறைகளை கேட்டறிந்த உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், போலீஸ் டி.ஜி.பி., ஸ்ரீநிவாசை தொடர்பு கொண்டு, மோட்டார் வாகன பிரிவு காவலர்களின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி