உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கலந்தாய்வுக் கூட்டம்

கலந்தாய்வுக் கூட்டம்

புதுச்சேரி : தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் சார்பாக, கூழ்மர ஒப்பந்ததாரர்கள் கலந்தாய்வு ஆலோசனைக் கூட்டம், புதுச்சேரியில் தனியார் மண்டபத்தில் நடந்தது. கரூர் டி.என்.பி.எல்., வனத்தோட்டத் துறை உதவி மேலாளர் ராஜசேகர் வரவேற்றார். துணை பொது மேலாளர் ஜெயக்குமார், உதவி பொது மேலாளர் ரவி, முதன்மை மேலாளர் செழியன் மற்றும் அலுவலர்கள் பங்கேற்று பேசினர்.இந்நிகழ்வில், வரும் மழைக்காலங்களில் விவசாயிகளின் தோட்டங்களில் உள்ள சவுக்கு மரங்களை அறுவடை செய்வது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் கூழ்மர அறுவடை செய்யும் ஒப்பந்ததாரர்கள் மற்றும் சவுக்கு விவசாயிகளின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர்.நிகழ்ச்சியில் வானுார் மற்றும் புதுச்சேரி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான ஒப்பந்ததாரர்கள் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர். நிறைவாக உதவி மேலாளர் பிரபாகரன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ