உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நுகர்வோர் அமைப்பு கருத்தரங்கு

நுகர்வோர் அமைப்பு கருத்தரங்கு

புதுச்சேரி : உலக நுகர்வோர் தினத்தையொட்டி, ராஜிவ்காந்தி நுகர்வோர் அமைப்பு, குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை சார்பில், கருத்தரங்கம் நடந்தது.முத்திரையர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த கருத்தரங்கில், பள்ளி நிறுவனர் முத்துராமன் தலைமை தாங்கினார். ராஜிவ்காந்தி நுகர்வோர் அமைப்பின் தலைவர் சங்கரலிங்கம் வரவேற்றார். பள்ளி துணை முதல்வர் அனந்தசயனம், செயலாளர் அறிவழகன் முன்னிலை வகித்தனர்.மாவட்ட நுகர்வோர் பூசல்கள் குறைதீர்வு ஆணையத்தின் நீதிபதி முத்துவேல், பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.நிகழ்ச்சியில், குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை இயக்குநர் சத்தியமூர்த்தி, துணை இயக்குனர் தயாளன், மாவட்ட நுகர்வோர் பூசல்கள் குறைதீர்வு ஆணைய உறுப்பினர் சுவித்தா, உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ரவிச்சந்திரன், ஆறுமுகம், சேஷாச்சலம், பேராசிரியர் தமிழமல்லன், சுகுமார், ரேவதி, சவுந்திரராஜன், முத்துரங்கம் உட்பட பலர் பங்கேற்றனர்.ராஜிவ்காந்தி நுகர்வோர் அமைப்பின் செயலாளர் அன்புவாணன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை