உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கார்பரேஷன் டைரக்டர் ஜெனரல் புதுச்சேரி வருகை

கார்பரேஷன் டைரக்டர் ஜெனரல் புதுச்சேரி வருகை

புதுச்சேரி: புதுச்சேரியில் இ.எஸ்.ஐ., சொசைட்டி துவங்க விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, புதுடில்லி இ.எஸ்.ஐ., கார்பரேஷன் டைரக்டர் ஜெனரல் கமல் கி ேஷார் சோன் அறிவுறுத்தினார். புதுடில்லி இ.எஸ்.ஐ., கார்பரேஷன் டைரக்டர் ஜெனரல் கமல் கிேஷார் சோன் புதிதாக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக நேற்று புதுச்சேரிக்கு வந்தார்.தொடர்ந்து, கோரிமேடு இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு வந்த அவர், மருத்துவமனை வளாகத்தில் ஆய்வு செய்தார். மருத்துவமனை சேவை, வளர்ச்சி திட்டங்கள் குறித்து கலந்துரையாடினார்.இதில் தொழிலாளர் ஆணையர் மாணிக்கதீபன், மருத்துவ கண்காணிப்பாளர் சீனிவாசன், துணை இயக்குனர் சித்ரா, மண்டல இயக்குனர் கிருஷ்ணகுமார், மாநில மருத்துவ அதிகாரி லோகநாதன், புதுச்சேரி பிராந்திய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் இ.எஸ்.ஐ., கார்பரேஷன் டைரக்டர் ஜெனரல் கமல் கி ேஷார் சோன் பேசுகையில், 'புதுச்சேரியில் இ.எஸ்.ஐ., சொசைட்டி துவங்க விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவமனை செயல்பாடுகளில் முன்னேற்றத்தில் இ.எஸ்.ஐ., கார்பரேஷன் அதிக அக்கறை எடுத்துக்கொள்ள தயராக உள்ளது' என்றார். தொடர்ந்து தொழிலாளர்களுக்கு கிடைக்கும் மருத்துவ வசதிகள் பற்றி கேட்டறிந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை